\
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் எச்சரிக்கை
Published on

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் எனவும் இது வரும் மூன்றாம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரையை நோக்கி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை, அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும் எனவும் மீனவர்கள் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு நான்காம் தேதி வரை செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com