தமிழ்நாடு
பாஜக, பாமக-வோடு எந்த காலத்திலும் கூட்டணி அமைக்க மாட்டோம் - திருமாவளவன் உறுதி
பாஜக, பாமக-வோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியர்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சி. முக்குலத்தோருக்காக குரல் கொடுக்கிற கட்சிதான். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த உழைக்கிற மக்களுக்காகவும் போராடுகிற கட்சிதான். அடிப்படையிலே உழைக்கும் மக்களின் பக்கம், பாதிக்கப்படுகிற மக்களின் பக்கம் நிற்கிற கட்சி விடுதலை சிறதிதைகள் கட்சி. ஜாதி அடிப்படையில், இரண்டு சமூகங்களுக்கு இடையிலே மோதலை உருவாக்கும் அரசியலை ஒருபோதும் திருமாவளவன் செய்ய மாட்டான். வன்னியர் சமூகத்தினருக்கு இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் ஊடாக இதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.