தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி : லண்டனில் முதல்வர் பேச்சு
தமிழகத்தில் ஹெலிகாப்டன் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும் என லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கல்லூரியில் முதல்வர் பழனிசாமி பேசிய போது, “லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் ஒரு கிளை அமைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள். இங்குள்ள மருத்துவ வசதிகளை தமிழக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்ததற்காக தமிழக அரசு, தமிழக மக்களின் சார்பில் நிறுவனத்திற்கு நன்றி. லண்டன் கிங்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய அரசு முழு ஆதரவு அளிக்கும்.
லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை தலைசிறந்த மருத்துவமனையாக திகழ்கிறது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை குறித்த நேரத்தில் கொண்டு வந்து சிகிச்சை அளிப்பது அரிய சாதனை. தமிழகத்திலும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.