"உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்" - ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டது. யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
OPS
OPSpt desk

செய்தியாளார் சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்ற ஓபிஎஸ் அணி கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...

இடைக்கால பட்ஜெட் 2024-2025
இடைக்கால பட்ஜெட் 2024-2025puthiya thalaimurai

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முழுமையான பட்ஜெட்டை நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்காக தாக்கல் செய்யும்.

சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாஜகவும் நாங்களும் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றோம். அந்த கூட்டணி முறியவில்லை. பாஜகவுடன் தொகுதி பங்கீடு முடிந்தவுடன் முதலில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு தான் தெரியப்படுத்தப்படும். 16 ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமருடன் மேடை ஏறுவதற்கான வாய்ப்பை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே நாங்கள் சொல்லிய படி நானும் டிடிவி தினகரனும் இணைந்து தான் பணியாற்றிக் கொண்டுள்ளோம். சசிகலா இணைந்து பணி செய்வாரா என்பதை அவரிடன் தான் கேட்க வேண்டும்.

பாஜகவுடன் ஒருபோதும் கூட்ணி இல்லை என்று கூறும் ஜெயக்குமார் பெரிய அறிவாளியா? ஒரு மனிதருக்கோ அல்லது அரசுக்கோ நன்றி என்பது இருக்க வேண்டும் நான்கரை ஆண்டு காலமாக ஒன்றிய அரசின் பரிபூரண ஆதரவோடு எடப்பாடி தலைமையிலான பழனிசாமி அணி ஆட்சியில் இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். நம்பிக்கை துரோகம், துரோகம் இதற்கெல்லாம் அடையாளம் எடப்பாடி பழனிசாமி தான்.

EPS
EPSfile

தமிழக முதலமைச்சர் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டு பயணம் செல்வதற்கு முன்பாக பேட்டி கொடுத்துள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் எவ்வளவு முதலீடுகளை கொண்டு வந்துள்ளார் என்பதை பொறுத்துதான் பதில் சொல்ல முடியும். திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் நடைபெற்றதாக இதுவரை தெரியவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நல திட்டங்களை ஜெயலலிதா அறிவித்தவுடன் அந்த திட்டத்திற்கான முழு பயனும் ஒவ்வொருவரையும் சென்றடைந்தது. அதை ஆனால் தற்போது திட்டத்தை அறிவிக்கும் போது ஒன்றை கூறுகிறார்கள் நடைமுறைப்படுத்தும் போது கூறியதை கட் செய்து 10 சதவீதம் கூட அவர்கள் அறிவிக்கும் திட்டம் மக்களை சென்றடையவில்லை.

admk symbol
admk symbolfile

இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தான் வழங்கப்பட்டது. யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகத்தை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். 2016ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் குறைவு ஏற்பட்டாலும் அவர், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மகத்தான வெற்றி பெற்று நல்லாட்சி செய்தார். அந்த வெற்றியின் மூலம் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். எடப்பாடி பழனிசாமி, முதலமைசசர் என்று தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. அது ஜெயலலிதா பெற்ற வெற்றி அதை நன்றாக அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கியது சசிகலா தான். அவருக்கு என்ன நன்றி செலுத்தினார் என்று உங்களுக்கு தெரியும்? பதவி கொடுத்த சசிகலாவையே கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்தார் அதுதான் அவர் செய்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். என்றைக்குமே நான் பொறுமையோடு தான் எனது பணிகளையும் கடமைகளையும் செய்வேன். பொறுமையை இழக்க மாட்டேன். சொல்ல வேண்டிய கருத்துகளை அழுத்தமாக சொல்லுவேன் அதில் உண்மை தன்மை இருக்கும் ஏனென்றால் ஜெயலலிதா சொன்னதைதான் நான் செய்தேனே தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

eps
epspt desk

நாங்கள் அனைவருமே தொண்டர்களின் விருப்பப்படி அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று தான் கூறுகின்றோம் அனைவரின் எதிர்பார்ப்பும் அதான். ஆனால் உலகத்திலேயே சேரக்கூடாது என்று சொல்லக்கூடிய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுகவில் நடப்பது உள்கட்சி பிரச்னை துரோகத்தின் வடிவம் என சொல்லி என்னை வெளியேற்றினார்கள். அது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஜனநாயக படுகொலை செய்தார்கள் நான் என்ன தவறு செய்தேன் என்பதை பகிரங்கமாக சொல்லி அதை நிரூபிக்க வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டேன் என்று சொல்பவர்கள் முட்டாள்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com