சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலை கைது செய்வோம் : தமிழக அரசு

சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலை கைது செய்வோம் : தமிழக அரசு
சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலை கைது செய்வோம் : தமிழக அரசு

பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயகோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர், ஜெயகோபால் ஆளு‌ம்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை தாமதப்படுத்‌தப்படுவதாக குற்றம்சாட்டினார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஜெயகோபாலை கைது செய்ய பரங்கிமலை காவல் உதவி ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

சட்டவிரோதமாக ஜெயகோபால் பேனர் வைத்த நிலையில் லாரி ஓட்டுநர் மீதான வழக்குடன் ஜெயகோபாலை சேர்த்தது ஏன்? என்றும் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக காவல்துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது ? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வீதியில் இறங்கி விதிமீறல் பேனரை அகற்றும் பணியை மட்டும்தான் நீதிபதிகள் செய்யவில்லை, மற்றபடி அனைத்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம் என்று குறிப்பிட்டனர். பேனர் கலாச்சாரம் வருவதற்கு முன்பு வீட்டு விசேஷங்களை நடத்தவில்லையா என்று கேட்ட நீதிபதிகள், விழா நடைபெறும் இடத்தில் மட்டும் வைப்பதற்கு மாறாக சாலைகளை ஆக்கிரமித்தே பேனர்கள் வைக்கப்படுவதாகவும் விமர்சித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com