உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை  மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின் 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின் 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின் 
Published on

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், வார்டு வரையறை இடஒதுக்கீடு செய்து முடித்த பின்னரே தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆனால் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாமல் அதற்குள் புதிய தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையத்துக்கு கண்டனங்கள்.புதிய தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளை கூட்டி ஆலோசனை நடத்தவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை. நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்ற உயர்ந்த நோக்கத்தை கேளிக்கூத்தாக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com