''தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்'' - விஜயபிரபாகரன்
இன்று மாலை தேமுதிகவின் தேர்தல் தொடர்பான அறிக்கை வெளிவர உள்ளதாக விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இன்னமும் இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக, தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. சென்னை போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இரு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை தேமுதிகவின் சார்பில் தேர்தல் தொடர்பான அறிக்கை வரவுள்ளதாக விஜயகாந்தியின் மூத்தமகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் அருகேயுள்ள எழுமூர் கிராமத்தில் விஜயபிரபாகரன் தேமுதிக கொடியை ஏற்றி தொண்டர்களிடையே பேசினார், அப்போது இதனை தெரிவித்தார். மேலும் “ விஜயகாந்த் காட்டும் வழியில் செயல்பட்டு இந்த தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும். வரும் 2021 தேர்தலில் நம்முடைய நோக்கம்வெற்றியடைய நாம் உறுதியேற்க வேண்டும்” என தெரிவித்தார்.