"விரட்டப்பட வேண்டியவர்கள் அதானியும் அம்பானியும்; பிழைக்க வருபவர்களை அல்ல" - திருமாவளவன்

"விரட்டப்பட வேண்டியவர்கள் அதானியும் அம்பானியும்; பிழைக்க வருபவர்களை அல்ல" - திருமாவளவன்
"விரட்டப்பட வேண்டியவர்கள் அதானியும் அம்பானியும்; பிழைக்க வருபவர்களை அல்ல" - திருமாவளவன்

உண்மையான அம்பேத்கரியவாதிகள் ஒருநாளும் பாஜக வில் இணையமாட்டார்கள் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் "2011 தேர்தலில் திமுகவிடம் 6 மாதங்களுக்கு முன்பே திருவிடைமருதூர் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று கேட்டோம். ஆனால் நாங்கள் வளர்ந்து விடுவோமோ என்கிற நோக்கிலோ என்னவோ தெரியவில்லை அதை தரவில்லை. தென் மாவட்டங்களில் தொகுதிகளை தர மாட்டேன் என்று 2006 தேர்தலில் ஜெயலலிதா கூறிவிட்டார். ஜனநாயக சக்திகள் இணைந்து சனாதன சக்திகளின் வாலை ஒட்ட நருக்குவோம்.
இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதை கூர்மைப்படுத்துகிறார்கள். பார்ப்பனர்கள் இந்து என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்" என்றார்.

மேலும் பேசிய அவர் " உண்மையான அம்பேத்கரியவாதிகள் ஒருநாளும் பாஜக வில் இணையமாட்டார்கள். சானதனவாதிகள் அடிப்படை வசதி கல்வி சுற்றுச்சூழல் ஆற்று மணல்,சமூக நீதி , இடஒதுக்கீடு எது பற்றியும் பேச மாட்டார்கள். மதத்தை பற்றி மட்டுமே பேசுவான் , வெறுப்பை மட்டுமே விதைப்பான்.
ஹிட்லருக்கு பிறகு RSS தான். சிலர் பேசுவது தமிழ் தேசியம் அல்ல, திரிபுவாதம். இனவாதம் பேசுகிறார்கள். விரட்டி அடிக்க வேண்டியவர்கள் அம்பானியும் அதானியும் தான், பிழைக்க வரும் தொழிலாளிகள் அல்ல" என்றார்.

இறுதியாக பேசிய திருமாவளவன் " இன வெறுப்பு என்பது தமிழ் தேசியம் இல்லை. ஆரியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் திராவிடத்தை எதிர்க்கிறார்கள்.
போலி தமிழ் தேசியம் மற்றும் போலி அம்பேத்கரியவாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com