"ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டுமென்பது எங்களுக்கு தெரியும்"- அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
governor rn ravi
governor rn ravipt desk

சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்ட அமைச்சர் ரகுபதி வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது...

சட்டப்படி ஒரு அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதல்வர் இன்று எழுத உள்ளார்.

Governor
Governorptr desk

சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சட்ட அமைச்சர் ரகுபதி வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.., அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியபோது... சட்டப்படி ஒரு அமைச்சரை நியமிக்கவும், நீக்கம் செய்யவும் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநருக்கு விரிவான கடிதத்தை முதல்வர் இன்று எழுத உள்ளார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவிPT

ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். முதல்வரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அமைச்சரின் நியமன நீக்க விவகாரதில் ஆளுநர் அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார். இல்லாத பூனையை இருட்டு வீட்டுக்குள் தேடுவதுபோல ஆளுநர் செயல்படுகிறார். மலை இலக்கனால் யார் வேண்டுமானாலும் அம்பை எய்தலாம் எனும் நோக்கில் எதிர்க் கட்சியினர் மட்டுமல்லாமல் ஆளுநரும் திமுகவினர் மீதான தாக்குதலில் ஈட்டுப்பட்டு வருகிறார்.

cm stalin
cm stalinpt desk

மத்திய அமைச்சர்கள் மீது வழக்கு நிலுவையிலுள்ள நிலையில், அவர்கள் அமைச்சர்களாக தொடர்கின்றனர். ஆளுநர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜி மீதான இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். திமுக இதுபோன்ற விவகாரங்களை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளும். எந்த ஆயுத்தை எப்போது எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த மோதல் போக்கை ஆரம்பித்து வைத்தது ஆளுநர் தான்.

இதனைத் தொடர்ந்து எந்தெந்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முதல்வர் முடிவு செய்வார். செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்” என்று கூறினார்.

RN Ravi - Senthil Balaji - MK Stalin
RN Ravi - Senthil Balaji - MK StalinFile image

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, ’செந்தில் பாலாஜி இலாக இல்லாத அமைச்சராக தொடர்கிறார். இது விசாரணைக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் வில்சன், ’அரசியல் அமைப்புச் சட்ட சரத்துக்களை பின்பற்றாமல் செயல்படும் ஆளுநரின் இது போன்ற செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவை’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com