தமிழ்நாடு
''வருவாய் பற்றாக்குறை காரணமாக திமுக வரிச்சுமையை சுமத்தாது என நம்புகிறோம்'' - திருமாவளவன்
''வருவாய் பற்றாக்குறை காரணமாக திமுக வரிச்சுமையை சுமத்தாது என நம்புகிறோம்'' - திருமாவளவன்
வருவாய் பற்றாக்குறை காரணமாக ஏழை, எளிய மக்களின் மீது திமுக அரசு வரிச்சுமையை சுமத்தாது என தான் நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''ஏழை எளிய நடுத்தர மக்களின் மீது வரிச்சுமையை சுமத்தாமல், பொருளாதாரத்தில் வலிமையடைந்த முன்னேறிய பிரிவினர் வரி செலுத்தும் வகையிலான பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்யும் என நம்புகிறோம்.
நிதிச்சுமையை சமாளிப்பதற்கு வேறு வழியில்லை என்கின்றன அடிப்படையில் மக்களுக்கு எதிரான திட்டங்களில் திமுக அரசு கவனம் செலுத்தாது என நம்புகிறோம். குறிப்பாக, மதுக்கடைகளை நம்பி வருவாயை மேம்படுத்துவதற்கு திமுக அரசு திட்டங்களை திட்டாது'' என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.