"பாசிச சக்திகளை ஒழிக்க ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சபதமேற்றுள்ளோம்" - காங் தலைவர் செல்வப் பெருந்தகை!

இந்திய நாட்டில் யார் வாழ வேண்டும் யார் வாழக் கூடாது என்பதை ஆட்சி நடத்தி வருபவர்கள் தீர்மானித்து வருகின்றனர், பாசிச சக்திகளை ஒழிக்க ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
Selva perunthagai
Selva perunthagaipt desk

செய்தியாளர்: கோகுல கிருஷ்ணன்

காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகையை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமித்ததை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், முன்னாள் எம்பி தங்கபாலு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், நகர தலைவர் அருள்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வணங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் செல்வப ;பெருந்தகை பேசிய போது....

TN Cong President
TN Cong Presidentpt desk

"நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், தேசத்தை காப்பாற்றக் கூடிய முக்கிய தேர்தல், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதற்கான பணிகள், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மூலம் நடந்து வருகிறது. குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கும் நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது,

இந்த நாட்டில் யார் வாழ வேண்டும் யார் வாழக் கூடாது என்பதை ஆட்சி நடத்தி வருபவர்கள் தீர்மானித்து வருகின்றனர். பாசிச சக்திகளை ஒழிக்க ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் சபதம் ஏற்றுள்ளோம். வன்முறைக்கு ஆளாகிவரும் இந்திய மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்" என உறுதிப்பட தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com