\
தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை - மின்சார வாரியம்

தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை - மின்சார வாரியம்

தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை - மின்சார வாரியம்
Published on: 

தமிழகத்தில் தற்போதைக்கு மின்கட்டணம் உயர்வு இல்லை மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுற்ற நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக செய்திகள் வெளியாகின. மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதனை சமாளிக்கும் பொருட்டு 30சதவீதம் வரை மின்கட்டணம் உயரப்போவதாகவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவின. சமூக வலைதளங்கள் மூலம் இந்தச்செய்திகள் அதிகளவில் பரவி மக்களை பீதியடையச் செய்தது. 

மின்சாரம் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என பலரும் எதிர்க்கருத்து தெரிவித்தும் வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயரப்போவதாக பரவும் செய்தியில் உண்மை இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்த எந்த திட்டமும் இல்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com