தமிழ்நாடு
"ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
"ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்க முடியாது" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
இந்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என தெரிவித்துள்ளார்.
இதேபோல, ஜெய் ஹிந்த் என்ற சொல் ஆளுநர் உரையில் இடம்பெறாததால், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்ற பேரவை உறுப்பினர் ஈஸ்வரனின் வார்த்தைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.