\
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது... சசிகலா
Published on

அனைத்து எம்எல்ஏ-க்களும் அன்புடன் பேசி வருவதாகவும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாளாக கூவத்தூர் விடுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை சந்திப்பதற்காக போயஸ் தோட்டத்திலிருந்து புறப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநருக்கு தாம் எழுதியதாக பொய்க் கடிதம் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக ஆதாரத்தை காட்டி குற்றம்சாட்டினார்.

பெண் ஒருவர் அரசியலில் இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம் எனக் கூறிய சசிகலா, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே தான் இதைப் பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கட்சிக்குள் நடக்கும் சலசலப்பு ஒன்றும் புதிது அல்ல எனக் கூறிய அவர், மீதமுள்ள நான்கரை ஆண்டுகால ஆட்சியை அதிமுக சிறப்பாக நடத்தும் எனவும் தெரிவித்தார். அனைத்து எம்எல்ஏ-க்களும் அன்புடன் பேசி வருவதாகவும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் சசிகலா கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com