தமிழ்நாடு
சமையலர் பாப்பாள் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஆட்சியரிடம் மனு
சமையலர் பாப்பாள் குடும்பத்தினருக்கு மிரட்டல்: ஆட்சியரிடம் மனு
தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்ட சத்துணவு சமையலர் பாப்பாள் குடும்பத்திற்கு மிரட்டல் வருவதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி அடுத்த திருமலைகவுண்டம் பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் சமையலராக பணிபுரிபவர் பாப்பாள். பாப்பாளை சாதி பெயரை சொல்லி திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தாக 87 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவி பாப்பாள் மற்றும் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள் வருவதாகவும், எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பாப்பாளின் கணவர் பழனிசாமி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பளரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.