திருப்பூர் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்கூலி அருள் வந்ததைப் போல் பறையின் இசைக்கு ஏற்ப நடனமாடினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்கூலி வருகை தந்தார். முன்னதாக, மோகனூர் கிராமம் வழியாக அவர் வாகனம் வந்த போது, அங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவில் பக்தர்கள் மேளம் அடித்து வழிபாடு நடத்தினர். அப்போது, அங்கு இறங்கிய ரூபா கங்கூலி, பக்தர்களுடன் சேர்ந்து அருள் வந்ததைப் போல் பறைக்கு ஏற்ப நடனம் ஆடினார்.