தமிழ்நாடு
கீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு
கீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு
கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வில் புதிதாக குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு ஏக்கரில் 23 குழிகள் தோண்டப்பட்டு 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டு விலங்குகளுக்கு தண்ணீர் சேகரிக்கப்படும் தண்ணீர் தொட்டி வடிவிலான திண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சதுர வடிவிலான இந்த திண்டு கற்களால் மூடப்பட்டுள்ளதால் அதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக பாசிமணிகள், மை தீட்டும் குச்சி, சுடுமண்ணால் ஆன பாசிமணிகள், இரும்பில் ஆன ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.