மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை ஓய்ந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி, அணை மற்றும் தேக்கடி பகுதிகளில் முற்றிலுமாக மழை இல்லை. எனவே, அணைக்கு நீர்வரத்து 1,906 கன அடியாக குறைந்துள்ளது. ஆனாலும், இந்த கணிசமான நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் இரண்டு புள்ளிகள் அதிகரித்து 127.40 அடியிலிருந்து 127.60 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தமிழகக் குடிநீருக்காக விநாடிக்கு 1,400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.