செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரிபுதிய தலைமுறை

சென்னை | 7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! என்ன காரணம்?

சென்னையின் 7 மண்டலங்களில் 30 , 31, ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று தேதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படபோவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published on

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படும் செம்பரம்பாக்கம் ஏரி, சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் குழாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சென்னையின் 7 மண்டலங்களில் 30 , 31, ஆகஸ்ட் 1 ஆகிய மூன்று தேதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படபோவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் இன்று (ஜூலை 26) அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 30 ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 இரவு 10 மணிவரை குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படவுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ”செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 30.07.2025 அன்று காலை 08.00 மணி முதல் 01.08.2025 இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7 (அம்பத்தூர்), 8 - (அண்ணா நகர்), 9 - (தேனாம்பேட்டை), 10 - (கோடம்பாக்கம்), 11 - (வளசரவாக்கம்). 12 -(ஆலந்தூர்), 13 -(அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை அவசரத் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி
தூத்துக்குடி - திருச்சி - கங்கைகொண்ட சோழபுரம் | பிரதமர் வருகையால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு!

சேமித்து தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com