தெப்பக்குளமான ரயில்வே சுரங்கப்பாதை: போராடும் மாணவர்கள்

தெப்பக்குளமான ரயில்வே சுரங்கப்பாதை: போராடும் மாணவர்கள்

தெப்பக்குளமான ரயில்வே சுரங்கப்பாதை: போராடும் மாணவர்கள்
Published on

விருத்தாசலத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக்கோரி மாணவர்கள் போராடினர்.

கடலூர் மாவட்டம் எருமனூர் கிராமத்தில் விருத்தாசலம் - சேலம் ரயில்பாதையின் குறுக்கே உள்ள சுரங்கபாதையில் இரண்டு ஆண்டுகளாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சின்னவடவாடி, எ.வடகுப்பம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில், ஓடையில் இறங்கியும், ரயில் பாதையை கடந்தும் செல்கின்றனர். இந்நிலையில் தேங்கி நிற்கும் நீரை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் தேங்கியிருக்கும் நீரில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com