இரவு முழுக்க தீப்பந்தங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

இரவு முழுக்க தீப்பந்தங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்
இரவு முழுக்க தீப்பந்தங்களுடன் குடிநீருக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையாக உருமாறிக்கொண்டிருக்கிறது தண்ணீர். சொட்டு நீருக்காக விடிய விடிய மக்கள் காத்திருக்கும் அளவிற்கு தண்ணீர் பிரச்னை தலையாய பிரச்னையாக மாறியிருக்கிறது.

காவிரி குடிநீர் திட்டக்குழாய் ஒன்றில் இருந்து சொட்டுச் சொட்டாக கசிந்து வருகிறது தண்ணீர். இந்தச் சொட்டு தண்ணீரை சேகரிக்க தீப்பந்தங்களுடன் இரவு முழுவதும் பெண்களும், இளைஞர்களும், சிறுவர், சிறுமிகளுமாக காத்திருக்கிறார்கள். இது வேறெங்கும் இல்லை. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருத்தேர்வலசை பஞ்சாயத்தை சேர்ந்த ஓடக்கரை குடியிருப்பில்தான் இந்தப் பரிதாப நிலை உள்ளது.

விவசாயக் கூலித் தொழிலாளர்கள், 10‌0 நாள் வேலைத்திட்டத்தை நம்பியுள்ளவர்கள் பெரும்பாலும் ‌வசிக்கும் இந்தக் கிராமத்தில், விலை கொடுத்து தண்ணீர் வாங்குவதென்பதே மிகப்பெரிய செலவு. இதனால் குழாயில் கசியும் சொட்டு தண்ணீரை இரவு முழுக்க காத்திருந்து பிடிக்கின்றனர்.

கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கிறது. அதனால் எந்தப் பயனும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்து கண்மாய் காய்ந்து கிடக்கும் நிலையில், இவர்களின் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து திருத்தேர்வலசை பஞ்சாயத்து அதிகாரியிடம் கேட்டபோது, குடிநீர் வடிகால்வாரிய அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஓடக்கரை கிராமத்திற்கு குடிநீர் வழங்க புதிய குழாய் இணைப்புத் தர திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவர்களின் தண்ணீர் தாகம் எப்போது தீரும் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com