2 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
முதலில் 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் இது படிபடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்து. 120 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக கீழ்பவானி திட்ட வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் அணையை திறந்துவைத்து, மலர்தூவி வரவேற்றனர். இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 747 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.