\
ஆழியாறு, ‌மணிமுக்தா அணை‌களில் நீர் திறக்க உத்தரவு

ஆழியாறு, ‌மணிமுக்தா அணை‌களில் நீர் திறக்க உத்தரவு

ஆழியாறு, ‌மணிமுக்தா அணை‌களில் நீர் திறக்க உத்தரவு
Published on

மணிமுக்தா நதி அணை மற்றும் ஆழியாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா நதி அணையில் இருந்து, வரும் 22ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் ‌விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 493 ஏக்கர் நிலம் பயன்பெறும். அதே போல், ‌கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்‌து, வரும் 25ஆம் தேதி நீர் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலம் பயன் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com