வறட்சியை நோக்கி செல்லும் பூண்டி ஏரி....சென்னை மக்களுக்கு இனிமேல் கஷ்டம்தான்

பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைவு... சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர் எழில் அளித்த கூடுதல் தகவல்கள்...

வேகமாக சரியும் பூண்டி ஏரியின் நீர் இருப்பு 146 மில்லியன் கன அடியாக சரிவடைந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 1,270 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு தற்பொழுது வறட்சியை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கிறது. இதில் சென்னை மக்களின் குடிநீருக்காக பூண்டி ஏரியிலிருந்து 132 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆகையால் விரைவில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com