“இது சென்னைக்கான Welcome Rain” - நீரியல் வல்லுநர் ஜனகராஜ் சொல்வதென்ன?

சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் கூறிய கருத்துகளை விரிவாக பார்க்கலாம்.

நீரியல் வல்லுநர் ஜனகராஜ் புதிய தலைமுறைக்கு பேசுகையில், “இந்த மழையை, சென்னைக்கு கிடைத்த Welcome Rain என்றுதான் நான் சொல்லுவேன். இந்த மழை எப்படி பெய்ததென்று துல்லியமாக நம்மால் சொல்ல முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

chennai rain
chennai rainpt desk

ஆனால், என்னை பொருத்தவரை கடந்த 10 நட்களாக கடும் வெயிலால் ரொம்ப கஷ்டப்பட்டோம். மக்கள் ரொம்ப அவதிப்பட்டாங்க. மரங்கள் பொசுங்கிப் போனதை பார்க்க முடிந்தது. சூழலியல் மிகவும் பாதிக்கப்பட்டது.

வரலாற்றில் ஜூன் மாதத்தில் சென்னை மாநகரம் கண்டிடாத அளவுக்கு வெப்பமும் வறட்சியும் இந்த வருடம் ஜூன் மாதத்தில் நிலவியது. ஆனால் நேற்றிரவு முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை பொழிவை நல்ல மழையாகத்தான் பார்க்கிறேன். இதை நான் வரவேற்கிறேன். இந்த மழையால், பொசுங்கிப்போன மரங்கள் மீண்டும் முளைப்பதற்கான வாய்ப்பிருக்கு” என்றார்.

அவர் கூறிய மேலும் பல செய்திகளை கீழே உள்ள வீடியோவை அறியலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com