சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்

சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்
சென்னையை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: இன்றைய நீர்மட்ட நிலவரம்

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் குடிநீர் ஆதாரங்களாக உள்ள முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் உள்ள புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. தற்போது மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து 1311 கன அடியிலிருந்து 1299  கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் நீர்இருப்பு 988 மில்லியன் கன அடியிலிருந்து 1093 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது ‌நீர் இருப்பு 468 மில்லியன் கன அடியிலிருந்து 559 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு அதிகரித்துள்ளது. கனமழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து ‌800 கன அடியிலிருந்து 1066 கன அடியாக‌ உயர்ந்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. ஏரிக்கு நீர்வரத்து 1763 கன அடியிலிருந்து 1045 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும் ஏரியில் தற்போது நீரிருப்பு 1037 மில்லியன் கன அடியிலிருந்து 1121 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. சோழவரம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 613 கன அடியிலிருந்து 671 கன அடியாக அதிகரித்திருக்கிறது. தற்போது ஏரியில் நீர் இருப்பு 412 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com