தமிழ்நாடு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை நெருங்குகிறது
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை நெருங்குகிறது
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை நோக்கி அதிகரித்து வருகிறது.
இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் அணைக்கு தற்போது நீர்வரத்து 1,382 கன அடியிலிருந்து 1,776 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 114 புள்ளி 80 அடியாகியுள்ளது. அதனால் தமிழகத்திற்கு குடிநீருக்காக 225 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.