கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 14,808 கனஅடியாக குறைந்துள்ளது.
கடந்த சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக காவிரி ஆற்றில் கபினி - கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,899 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 11,774 கன அடியாகக் குறைக்கப்பட்டது.