தமிழ்நாடு
ஒரே நாளில் 3 அடி உயர்ந்த மேட்டுர் அணையின் நீர்மட்டம்
ஒரே நாளில் 3 அடி உயர்ந்த மேட்டுர் அணையின் நீர்மட்டம்
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 21,947 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 3.6 அடி உயர்ந்து 48.77 அடியாக உள்ளது. நீர் இருப்பு 17.04 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் தொடர்ந்து 12 நாட்களுக்கு அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.