வேகமாக நிரம்பும் வைகை அணை

வேகமாக நிரம்பும் வைகை அணை

வேகமாக நிரம்பும் வைகை அணை
Published on


வைகை அணையின் நீர் மட்டம், 2 ஆண்டுகளுக்கு பிறகு 50 அடியை எட்டியுள்ளது. 

முல்லைப் பெரியாறு அணியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 769 கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம், கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 50 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகை அணையின் தற்போதைய நீா் மட்டம் 50.03 அடியாகவும், நீா் வரத்து வினாடிக்கு 769 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் வினாடிக்கு 60 கன அடியாகவும், மொத்த நீா் இருப்பு 1996 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. மதுரை மற்றும் ஆண்டிபட்டி, சேடபட்டி கூட்டு குடிநீா் திட்டத்திற்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com