தமிழ்நாடு
மேட்டூரில் நீர்மட்டம் உயர்வு: மூழ்குகிறது நந்தி சிலை
மேட்டூரில் நீர்மட்டம் உயர்வு: மூழ்குகிறது நந்தி சிலை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் உள்ள நந்தி சிலையும் கிறிஸ்துவ கோபுரமும் தண்ணீரில் மூழ்கி வருகின்றன.
கர்நாடகாவில் கனமழை காரணமாகவும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், அணைக்கு தொடர்ந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள நந்தி சிலையின் கழுத்து வரையும், கிறிஸ்துவ கோபுரம் அதன் சாளரம் வரையும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால், இன்னும் இரண்டு நாட்களில் நந்தி சிலை முழுமையாக தண்ணீரில் மூழ்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.