கடல் போல் இருக்கும் காவேரி ! பயமறியாமல் பரிசல் ஓட்டும் சிறுவர்கள் !

கடல் போல் இருக்கும் காவேரி ! பயமறியாமல் பரிசல் ஓட்டும் சிறுவர்கள் !

கடல் போல் இருக்கும் காவேரி ! பயமறியாமல் பரிசல் ஓட்டும் சிறுவர்கள் !
Published on

நாகமரையில் கடல் போல் காட்சியளிக்கும் காவேரி ஆற்றில் பயமறியாமல் பரிசல் ஓட்டும் சிறுவர்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

தருமபுரி மாவட்ட எல்லையான நாகமரை பகுதியில் இருந்து பண்ணவாடிக்கு சுமார் 5 கி.மீ தொலைவுக்கு பரிசல், படகுப் போக்குவரத்து உள்ளது. தண்ணீரில்லாத வறட்சியான காலங்களில் இந்தப் பயணம் வெறும் 50 அடி தொலைவுக்கான பயணம் - 5 நிமிடம் மட்டுமே. ஆனால், தற்போது கர்நாடகப் பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, அதன் உபரி நீர் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. மேட்டூர் அணை 100 அடியை எட்டினால் நாகைமரையில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிகிறது.

தற்பொழுது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், நாகமரை குடியிருப்பு வரை தண்ணீர் நிரம்பி நீர்த்தேக்கப் பகுதி முழுவதும் கடல் போல் காட்சி தருகிறது. தண்ணீர் அதிகமாக இருப்பதால், மீன்பிடித் தொழிலில் இப்பகுதி மக்கள் தீவிரம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும் நாகமரை-பண்ணவாடிக்கு பரிசல் பயணம் சுமார் 5 கி.மீ செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் வேகமாக வருவதால் நடுப்பகுதிக்குச் செல்லாமல், ஓரமாகவே பரிசலை இயக்குகின்றனர். தண்ணீர் அதிகமாக வருவதால், மாலை நேரங்களில் பரிசல் இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாகமரைக்கும் பண்ணவாடிக்குமான பரிசல் இயக்கம் குறைந்தளவிவேலேயே இருந்து வருகிறது.

கடல் போல் காட்சியளிக்கும் இந்த தண்ணீரில் நீண்ட காலமாக பரிசல் இயக்குபர்களே அலையில் பாதிப்பு ஏற்படும் என்பதால், பாதுகாப்பிற்காக 4, 5 பரிசல்களை ஒன்றன் பின் ஒன்றாக இயக்கி வருகின்றனர். ஆனால் நாகமரையில் உள்ள சிறுவர்கள் பயமறியாமல், பாதுகப்பு உபகரணங்கள் கூட இல்லாமல் நினைத்த நேரத்திற்கு, வெறுமனே பொழுது போக்கிற்கு காவேரி ஆற்றில் பரிசலை ஓட்டி செல்கின்றனர். இதனால் பாதிப்பு அசம்பாவிதங்கள் ஏற்பட அதிகப்படியான வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com