நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர்! - தமிழக அரசு தகவல்
நாளை முதல் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு குடிநீர் கொண்டுவரும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ரயில்களின் தண்ணீர் ஏற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நிறைவடைந்தவுடன் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதையடுத்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நாளை முதல் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.