தண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை

தண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை

தண்ணீர் பிரச்னையால் நேர்ந்த துயரம் - ஒருவர் அடித்துக் கொலை
Published on

தஞ்சை அருகே தண்ணீர் பிரச்னையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். 

தஞ்சை அருகே உள்ள விளார் வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் ஆனந்தபாபு சமூக ஆர்வலர். மேலும் அந்தப் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டராகவும் இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த குமார் மற்றும் அவரது மகன்கள் கோகுல்நாத், கோபிநாத், ஸ்ரீநாத் ஆகியோர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்தனர். இதில் அவர்களுக்கும் ஆனந்த பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த குமார் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து உருட்டு கட்டையால் ஆனந்தபாபுவை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த ஆனந்த்பாபுவின் தந்தை தர்மராஜையும் அவர்கள் தாக்கினர். இந்தத் தாக்குதலில் ஆனந்தபாபு பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தர்மராஜ் தொடர்ந்த சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள தஞ்சை தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீநாத்தை கைது செய்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட குமார், கோகுல்நாத், கோபிநாத் ஆகியோர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com