\
தண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்

தண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்

தண்ணீருக்காக சண்டை - பெண்ணை கத்தியால் கிழித்த சபாநாயகரின் ஓட்டுநர்
Published on: 

பல்லாவரம் அருகே தண்ணீரால் ஏற்பட்ட சண்டையில் சபாநாயகர் தனபாலின் ஓட்டுநர் பெண்ணை கத்தியால் கிழித்தார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாசினி (28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு தண்ணீருக்காக மோட்டர் போட்டுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர், ‘சம்பில் தண்ணீர் இல்லை எதற்கு மோட்டர் போடுகிறாய்’ மோகனை சத்தம் போட்டுள்ளார். 

இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட மோகனை ஆதிமூல ராமகிருஷ்ணன் எட்டி உதைத்துள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அவரது மனைவியையும் அடித்து, கத்தியால் வாய்த்தாடையில் கிழித்துள்ளார். இதில் காயமடைந்த சுபாஷினி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வாயில் 6 தையல் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவர் சபாநாயகரின் ஓட்டுநராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com