தமிழ்நாடு
தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் - ஸ்டாலின்
தமிழகத்தில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் - ஸ்டாலின்
சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க லாரிகள் மூலம் போதுமான தண்ணீரை விநியோகம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கடுமையான வறட்சியின் காரணமாக தமிழகம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர் கொண்டுவருவதாக கூறியுள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல்குவாரிகளில் நீரைத் தேடி அலையும் அவல நிலையை அதிமுக அரசு ஏற்படுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாநகரில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், ஆந்திர முதலமைச்சரை சந்தித்து கிருஷ்ணா நதி நீரை பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.