\
குடிநீர் கேன்களின் விலை உயர்வு: ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி!

குடிநீர் கேன்களின் விலை உயர்வு: ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி!

குடிநீர் கேன்களின் விலை உயர்வு: ஜிஎஸ்டி வரி விதிப்பு எதிரொலி!
Published on

ஜிஎஸ்டி வரி காரணமாக சென்னையில் குடிநீர் கேன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி முறைப்படி குடிநீர் கேன்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. வரியை குறைக்கக்கோரி உற்பத்தியாளர்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தியிருந்த நிலையில் தற்போது குடிநீர் கேன்களின் விலையை அதிகரித்துள்ளனர். இதன்படி குடிநீர் கேன்களின் விலையில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மிகப்பெரும்பான்மையான மக்கள் கேன் குடிநீரையே நம்பியுள்ள நிலையில், இந்த விலை உயர்வால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com