தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் !

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் !
தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் !

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை எடுக்க உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். ஏற்கெனவே தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும் நிலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு மக்களை மேலும் பீதியடையச் செய்தது.

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் நிஜலிங்கம் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளனர். 5 நாளில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உடன் பேச்சுவார்த்தை நடத்த உறுதி அளித்துள்ளனர். அதனால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு லாரிகளை இயக்க அறிவுறுத்தியுள்ளோம். பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com