‘நம்ம சென்னை’: அய்யோ முடியல... பாதாளச் சாக்கடை பணிகளால் தேங்கும் கழிவு நீர்.. பாதிக்கப்படும் மக்கள்

சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் நிலை என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தாம்பரம் மாநகராட்சி 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிதாக துவங்கப்பட்டது. சென்னைக்கு அருகில் இருக்கும் பல்வேறு பகுதிகளை இணைத்து இந்த தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி என்பது தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் போன்ற நகராட்சிப் பகுதிகளையும் மாதம்பாக்கம், பெருங்களத்தூர் போன்ற பேரூராட்சிகளையும் உள்ளடக்கி பெரிட மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது.

இந்த மாநகராட்சி ஆண்டுக்கு 284 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டக்கூடிய தமிழகத்தின் முக்கியமான மாநகராட்சியாக உள்ளது. இந்த மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருக்கிறது என்பது, இங்கு வசிக்கும் பொதுமக்களது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.

பாதாள சாக்கடை திட்டம் என்பதும் முழுமை பெறாமல் உள்ளது. தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் மட்டும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் மற்ற பகுதிகளில் இன்னும் நிறைவு பெறாத காரணத்தால், கழிவு நீர் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய பிரச்னைகளை உண்டாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்தான பொதுமக்களின் பேட்டிகளும் கீழ்கண்ட காணொளியில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com