\
கழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கழிவுநீர் தொட்டி தோண்டும் பணி - மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
Published on

ஆம்பூர் அருகே கழிவுநீர் தொட்டியை தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் அவரது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி தோண்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் என்பவரை அழைத்து பணியில் ஈடுபடுத்தியுள்ளார். பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வெங்கடேசன், அருகாமையில் உள்ள சந்திரன் என்பவரது வீட்டின் மின்சாரக் கம்பியானது கீழே விழுந்து கிடந்தது தெரியாமல் மற்ற பொருட்களுடன் சேர்த்து இதனையும் சேர்த்து அப்புறப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதில் மின்சாரம் பாய்ந்து வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெங்கடேசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com