வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வசூலில் ஈடுபட்டாரா? - வெளியான வீடியோவால் சர்ச்சை

வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வசூலில் ஈடுபட்டாரா? - வெளியான வீடியோவால் சர்ச்சை
வடபழனி காவல் ஆய்வாளர் மாமூல் வசூலில் ஈடுபட்டாரா? - வெளியான வீடியோவால் சர்ச்சை

சென்னை வடபழனி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் மாமூல் வசூலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜி.கண்ணன். இவர் வடபழனி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அவரிடம் கவரில் பணம் வாங்கி பாக்கெட்டில் வைத்துச் செல்வதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் உள்ள சம்பவம் வடபழனியில் உள்ள ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. வடபழனி பகுதியில் சூதாட்ட கிளப், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வாளர் கண்ணன் மாமூல் வசூலிப்பதாகவும் அது தொடர்பான வீடியோ தான் என சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர் கண்ணனிடம் கேட்ட போது, கொரோனா ஊரடங்கிற்கு முன்பு உள்ள பழைய வீடியோ எனவும், தனது தனிப்பட்ட முறையிலான கொடுக்கல் வாங்கலை சித்தரித்து தன்னை பழிவாங்கும் நோக்கில் காவல் துறையில் உள்ள சிலர் வேண்டுமென்றே என்னை பற்றி அவதூறு பரப்புவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாமூல் வாங்கியது உண்மை என நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com