\
சென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் !

சென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் !

சென்னை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் !
Published on

கடலூர், நாகை, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சென்னை, நாகை, கடலூர், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற காரணத்தால் அந்தமான் தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்றும், ஆந்திரா வங்கக் கடல் பகுதியில் நாளை வரையிலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com