தமிழ்நாடு
பலத்த காற்று வீசும்.. கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பலத்த காற்று வீசும்.. கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் அந்தமான் தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்றும் நாளையும், ஆந்திரா மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை, மறுநாள் வரையிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு தினங்களுக்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில முறை மிதமான மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.