தமிழ்நாடு
இந்தி படிக்க விருப்பமா? - கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்ப படிவத்தில் கேள்வி..!
இந்தி படிக்க விருப்பமா? - கோவை மாநகராட்சி பள்ளி விண்ணப்ப படிவத்தில் கேள்வி..!
கோவை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவத்தில், மூன்றாவது மொழியாக இந்தி படிக்க விருப்பமா? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்காக கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தில், மூன்றாம் மொழியாக இந்தி கற்க விருப்பமா என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.
அதே போன்று, கைத்தொழில் பாடம் கற்க விரும்புகிறீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு தொடங்கி விட்டதா என்ற ஐயம் எழுவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது. விண்ணப்ப படிவங்களை திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது.