\
சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இன்று 40ஆயிரத்து 700பேர் முன்பதிவு 

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இன்று 40ஆயிரத்து 700பேர் முன்பதிவு 

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இன்று 40ஆயிரத்து 700பேர் முன்பதிவு 
Published on

விடுமுறை நாளான இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேற்றைய தினம், அதிகபட்சமாக 34ஆயிரத்து 900 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. 40ஆயிரத்து 700பேர் தரிசனம் செய்வதற்காக இன்று முன்பதிவு செய்துள்ளனர்.

வரும் நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com