சென்னையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு

சென்னையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

சென்னை அமைந்தகரை ‌பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அமைந்தகரை அடுத்த கக்கன் நகரில் அன்வர் பாஷா என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் பேரப்பிள்ளைகள் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த போது, சுமார் 10 அடி நீளம், 6.5 அடி உயரம் கொண்ட இவரது வீட்டின் ‌சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த அன்வர் பாஷாவின் பேரக்குழந்தைகள் தயான், முஸ்கான் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

‌இதனிடையே பழைய சுவர் என்பதால் சரிசெய்யக்கூறி அன்வர் பாஷாவிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்ததாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டு சரிசெய்யாமல் தட்டிக்கழித்ததால் தற்போது இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com