\
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
Published on

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதியம் 2,300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்படி, மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 2,000 ரூபாய் உயர்த்தப்பட்டு 9,500 ரூபாய் ஆக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்களுக்கான சம்பளம் 1,900 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாய் ஆக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளம் 2,300 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,500 ரூபாய் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறுத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாக மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com