நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு?
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க குழு அமைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்தது திமுகதான் என்று பேசினார்.
அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு " 2010-ஆம் ஆண்டு திமுக அறிவித்த ஊதிய உயர்வுக்கு நிதி ஒதுக்கி அதனை செயல்படுத்தியது அதிமுக அரசு. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற சட்டத்தின்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2016-ஆம் ஆண்டு நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கினார்.
நடப்பாண்டில் புதிய ஊதிய உயர்வு வழங்குவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழுவின் பரிந்துரைப்படி நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்

