\
விருத்தாச்சலம்: தொடரும் கார் விபத்து - சாலையில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விருத்தாச்சலம்: தொடரும் கார் விபத்து - சாலையில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

விருத்தாச்சலம்: தொடரும் கார் விபத்து - சாலையில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

விருத்தாச்சலம் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தலைகுப்புற வாய்க்காலில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

சிதம்பரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த காரை ஆனந்த் என்பவர் ஓட்டிச்சென்றுள்ளார். இந்த காரில் அஸ்கத் அலி (27), முத்துக்கனி (36), மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், பரங்கிப்பேட்டை – விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அஸ்கத் அலி, முத்துக்கனி உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். கார் ஓட்டுநர் ஆனந்த் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சிதம்பரத்திலிருந்து - விருத்தாச்சலம் நோக்கி வந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதேப்பகுதியில் இருந்த புதரில் புகுந்து விபத்து ஏற்பட்டது. அப்பகுதியில் அடிக்கடி இதுபோல கார் கவிழ்ந்து விபத்துகள் நடந்து வருவதால் அப்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com