தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.61% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.61% வாக்குப்பதிவு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 39.61% வாக்குப்பதிவு

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 39.61% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.79% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்த பட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 29.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் 37.16% வாக்குகள் பதிவாகியுள்ளன” என்றார்.

தமிழகத்தின் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 9 மணி வரையிலான நிலவரப்படி தமிழகத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 மணி வரை 26.29%  சதவீத வாக்குகள் பதிவாகின.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com